ஒரு காலத்தில் நாட்டுக்கே உணவு கொடுத்த தஞ்சைக்கு சத்தீஸ்கரிலிருந்து அரிசி இறக்குமதி..!

ஒரு காலத்தில்  நாட்டுக்கே உணவு கொடுத்தது. நெற்களஞ்சியம் என அழைக்கப்படும் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம். ஒரு காலத்தில்  நாட்டுக்கே உணவு கொடுத்தது,லட்சக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள். ஆனால், இன்றைய யதார்த்த நிலையோ நெஞ்சை கனமாக்குகிறது. தற்பொழுது வெளிமாநிலத்திலிருந்து அரிசி இறக்குமதி செய்யப்பட்ட அதிர்ச்சி தகவல் இங்குள்ள விவசாயிகளின் நம்பிக்கையை கெடுத்துள்ளது. சதீஸ்கர் மாநிலத்திலிருந்து ரயில் மூலமாக இறக்குமதி செய்யப்பட அரிசி. தஞ்சை, நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரேசன் கடைகள் மூலமாக விநியோகம் செய்ய 3660 டன் அரிசி சதீஸ்கர் மாநிலத்திலிருந்து

ஒரு காலத்தில்  நாட்டுக்கே உணவு கொடுத்தது.

நெற்களஞ்சியம் என அழைக்கப்படும் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம். ஒரு காலத்தில்  நாட்டுக்கே உணவு கொடுத்தது,லட்சக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள். ஆனால், இன்றைய யதார்த்த நிலையோ நெஞ்சை கனமாக்குகிறது. தற்பொழுது வெளிமாநிலத்திலிருந்து அரிசி இறக்குமதி செய்யப்பட்ட அதிர்ச்சி தகவல் இங்குள்ள விவசாயிகளின் நம்பிக்கையை கெடுத்துள்ளது.

சதீஸ்கர் மாநிலத்திலிருந்து ரயில் மூலமாக இறக்குமதி செய்யப்பட அரிசி.

தஞ்சை, நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரேசன் கடைகள் மூலமாக விநியோகம் செய்ய 3660 டன் அரிசி சதீஸ்கர் மாநிலத்திலிருந்து ரயில் மூலமாக இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. உலகுக்கே சோறு போட்ட காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு ஏன் இந்த அவலநிலை? மாடு கட்டி போர் அடித்தால் மாளாது என, யானை கட்டி போர் அடித்த சோழநாடு அது. ‘சோழநாடு சோறுடைத்து…’ என்றெல்லாம் புகழப்பட்ட புண்ணிய பூமிக்கா இந்தப் பரிதாப நிலை?

ஒரு ஏக்கருக்கு மூவாயிரம் கிலோவுக்கும் மேல் நெல் விளைந்த ஊரு…

ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் என அழைக்கப்படும் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய இடங்களில் உள்ள கிராமங்களில் முப்போகமும் பசுமைப் போர்வை போர்த்திருந்தது. ஆண்டுக்கு 25 லட்சம் ஏக்கருக்கு மேல் நெல் சாகுபடி நடைபெற்றது. ஓர் ஏக்கருக்கு மூவாயிரம் கிலோவுக்கும் மேல் நெல் விளைந்தது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு நெல் ஏற்றுமதி செய்யப்பட்டது. விவசாயிகள் வளமான வருமானம் எடுத்து, மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்தார்கள். விருந்தோம்பலில் உலகுக்கே உதாரணமாய் திகழ்ந்தார்கள். அன்னையாக, அமுதசுரபியாக, அன்னபூரணியாக தானியங்களை வாரி வழங்கி, செழிப்பான வாழ்க்கையைக் கொடுத்தது காவிரி.

காவிரி தண்ணீர் கிடைக்காததால் பல ஆண்டுகள் குறுவை சாகுபடி நடைபெறவே இல்லை.

1970-களில் கர்நாடக அணைகளில் காவிரி தாய் சிறை வைக்கப்பட்டதிலிருந்து தொடங்கியது நெற்களஞ்சிய பூமியின் இருண்டகாலம். காவிரி தண்ணீர் கிடைக்காததால் பல ஆண்டுகள் குறுவை சாகுபடி நடைபெறவே இல்லை. கடந்த 20 ஆண்டுகளாகச் சம்பா சாகுபடியும் பரிதாப நிலைக்குச் சென்றது. சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு 18 லட்சம் ஏக்கரில் நடைபெற்ற சம்பா சாகுபடியின் பரப்பு, தண்ணீர்ப் பற்றாக்குறையின் காரணமாகப் படிப்படியாகக் குறைந்து 10 லட்சம் ஏக்கராகச் சுருங்கிப் போனது. கடந்த ஆண்டு நிலைமை இன்னும் மோசம். 2016-17 ஆண்டு தஞ்சை, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மூன்று மாவட்டங்களிலும் நடைபெற்ற சம்பா சாகுபடி பரப்பு வெறும் 3 லட்சம் ஏக்கர் மட்டுமே. இவற்றிலும் கூட பெரும்பகுதி வறட்சியில் கருகிப்போனது. நூற்றுக்கும் அதிகமான விவசாயிகளின் உயிர்கள் வறட்சிக்குத் தாரை வார்க்கப்பட்டது.

தமிழ்நாட்டில் உள்ள குடோன்களில் போதியளவு நெல் இருப்பு இல்லை.

நெல் சாகுபடி வெற்றிகரமாக நடைபெற்றால், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலமாக, விவசாயிகளின் நெல்லைக் கொள்முதல் செய்து, முகவராகச் செயல்பட்டு இந்திய உணவு கழகத்திற்கு அரிசியாகக் கொடுக்கும். இதற்கான செலவை இந்திய உணவுக் கழகம் கொடுக்கும். தமிழ்நாட்டில் உள்ள குடோன்களிலேயே இருப்பு வைக்கப்பட்டும் அரிசியை, தமிழ்நாடு அரசு விலை கொடுத்து வாங்கும். இதுதான் வழக்கமான நடைமுறை. கடந்த ஆண்டு காவிரி டெல்டா மாவட்டங்களில் நெல் சாகுபடி முறையாக நடைபெறாததால், தமிழ்நாட்டில் உள்ள குடோன்களில் போதியளவு நெல் இருப்பு இல்லை. இதனால்தான் இந்திய உணவுக் கழகத்தின் மூலமாக சத்தீஸ்கர் மாநிலத்திலிருந்து 3660 டன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

வரும் காலங்களில் விவசாயிகளின் நிலை இப்பொழுது உள்ள நிலையை விட கேள்விக்குறியே..

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos