மன மகிழ்வு தரும் மனோரா!

நினைவுச்சின்னம் தான் மனோரா. 1814ல் கடல் போரில் நெப்போலியனுடன் போரிட்டு ஆங்கிலேயர்கள் வெற்றி பெற்றதைப் பாராட்டும் வகையில், தஞ்சையை ஆண்ட தஞ்சாவூர் மராத்திய மன்னர் இரண்டாம் சரபோஜி ஒரு நினைவுச்சின்னத்தை நிறுவினார். அந்நினைவுச்சின்னத்தை மனோரா என்று அழைக்கின்றனர். மனோராவின் அமைப்பு 5 அடி உயரம் கொண்ட மனோரா அருங்கோண வடிவில் எட்டு அடுக்குகளை கொண்டது. மராட்டியர்களின் கட்டிடகலைக்கு உதாரணமாய் விளங்கும் இந்த கோட்டையை சுற்றி மதில் சுவரும் அதன் உள்ளே அகழியும் இருக்கிறது. கடற்கரை ஓரத்தில் இருக்கும்

நினைவுச்சின்னம் தான் மனோரா.

1814ல் கடல் போரில் நெப்போலியனுடன் போரிட்டு ஆங்கிலேயர்கள் வெற்றி பெற்றதைப் பாராட்டும் வகையில், தஞ்சையை ஆண்ட தஞ்சாவூர் மராத்திய மன்னர் இரண்டாம் சரபோஜி ஒரு நினைவுச்சின்னத்தை நிறுவினார். அந்நினைவுச்சின்னத்தை மனோரா என்று அழைக்கின்றனர்.

மனோராவின் அமைப்பு

5 அடி உயரம் கொண்ட மனோரா அருங்கோண வடிவில் எட்டு அடுக்குகளை கொண்டது. மராட்டியர்களின் கட்டிடகலைக்கு உதாரணமாய் விளங்கும் இந்த கோட்டையை சுற்றி மதில் சுவரும் அதன் உள்ளே அகழியும் இருக்கிறது. கடற்கரை ஓரத்தில் இருக்கும் இந்த உப்பரிகை போல் அமைந்த கோட்டைக்கு சரபோஜி மன்னர் ராணியுடன் சில சமயங்கள் வந்து போனதாக தகவல்கள் உண்டு. துப்பாக்கிகள்,மற்றும் ஏனைய ஆயுதங்கள் வைத்துகொள்ளும் இடமும் இங்கே உண்டு.

இருப்பிடம் மற்றும் செல்லும் வழி

பட்டுக்கோட்டையில் இருந்து ராமநாதபுரம் செல்லும் வழியில் இருபதாவது கிலோமீட்டர் தொலைவில் சேதுபாவாசத்திரம் உள்ளது அங்கிருந்து இடது புறம் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் மனோரா உள்ளது .
பட்டுக்கோட்டையில் இருந்து மல்லி பட்டினம் வழியாக பஸ் வசதி உள்ளது.
கன்னியா குமரி -சென்னை கிழக்கு கடற்கரை சாலை இந்த மனோராவை ஒட்டியே செல்கிறது ..!
மனோரா பார்வை நேரம் காலை ஒன்பது மணி முதல் மாலை ஐந்து மணி வரை விடுமுறை நாட்களிலோ மற்ற நாட்களிலோ மதியத்துக்கு பிறகு அங்கு செல்வது நல்லது..! கடல்சார்ந்த இடமாக இருப்பதால் இங்கு வருவது மனமகிழ்வை தரும்.  கடல் உணவுகளை சுவைக்க மறந்து விடாதீர்கள்.
2 comments

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

2 Comments

 • பாஸ்கர்
  18/08/2018, 2:30 PM

  மிகவும் சிறப்பு வாய்ந்த இடம் இது. கல்லூரி காலங்களில் சுற்றி திரிந்த இடங்களில் இதுவும் ஓன்று. வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் பார்க்க எண்ணும் இடம்.
  நன்றி தோழரே

  REPLY
  • deltavoice@பாஸ்கர்
   20/08/2018, 5:16 PM

   நன்றி தொடர்ந்து இணைந்திருங்கள்

   REPLY

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos