டெல்டாவின் கடைமடை பகுதியில் அடுத்தடுத்த புதிய ongc கிணறுகள்.

டெல்டாவின் கடைமடை பகுதியில் அடுத்தடுத்த புதிய ongc  கிணறுகள். தாங்குமா திருவாரூர்?   பலத்த எதிர்ப்புகளுக்கு இடையே, சுற்றிலும் லேசர் வளையங்கள் பாதுகாப்பில் இயங்கி கொண்டிருக்கும் கரையங்காடு ongc நிறுவனத்தின் எண்ணை கிணற்றிற்கு அருகே சுமார் 1000 மீட்டர்களுக்கும் குறைவான தூரத்தில் உள்ள விளாங்காடு கிராமத்தில்  புதிய எண்ணை கிணறுகள் அமைக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகிறது ongc நிறுவனம். சமூக ஆர்வலர்களை அவமதிக்கும் நோக்கம்.. கடந்த ஆண்டு இந்த நேரங்களில் கரையங்காடு அதன் சுற்று வட்டார

டெல்டாவின் கடைமடை பகுதியில் அடுத்தடுத்த புதிய ongc  கிணறுகள். தாங்குமா திருவாரூர்?

 

லத்த எதிர்ப்புகளுக்கு இடையே, சுற்றிலும் லேசர் வளையங்கள் பாதுகாப்பில் இயங்கி கொண்டிருக்கும் கரையங்காடு ongc நிறுவனத்தின் எண்ணை கிணற்றிற்கு அருகே சுமார் 1000 மீட்டர்களுக்கும் குறைவான தூரத்தில் உள்ள விளாங்காடு கிராமத்தில்  புதிய எண்ணை கிணறுகள் அமைக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகிறது ongc நிறுவனம்.

சமூக ஆர்வலர்களை அவமதிக்கும் நோக்கம்..

கடந்த ஆண்டு இந்த நேரங்களில் கரையங்காடு அதன் சுற்று வட்டார பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் நோக்கில் ongc நிறுவனம் செயல்பட்டு வருவதாக எழுந்த பிரட்சனையில் ஆங்காங்கே போராட்டம் நடைபெற்று வந்தது இந்த நிலையில் நாம் தழிழர் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் சிலர் இடும்பாவனம் பகுதியில் போராட்டம் நடத்தியதாக கூறி கைதுசெய்யப்பட்டு ஒன்றரை வருடங்களுக்கு பிறகு சில தினங்களுக்கு முன்னர் தான் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் போராட்டம் நடைபெற்ற பகுதியில் இருந்து 400 மீட்டர் தொலைவில் எண்ணை கிணறுகள் அமைக்க அப்பகுதி மக்கள் சிலர் அனுமதி வழங்கியுள்ளனர். மக்களுக்காக சிறை வரை சென்ற சில சமூக ஆர்வலர்களை அவமதிக்கும் நோக்கம் என அப்பகுதியினர் குறை கூறி வருகின்றனர்.

 

இடும்பாவனம்,கற்பகநாதர்குளம் துளசியாப்பட்டினம் பகுதியில் இருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் சாலையின் இடது புறத்தில் இந்த பணிகள் மிக துரிதமாக நடைபெற்று வருகின்றது. கடந்த இரு வருடங்களாக சிரமைக்கப்படாத சாலைகள் அவசர அவசரமாக சரிசெய்யப்பட்டதை சில முகநூல் போராளிகள் எங்களுக்கு கிடைத்த வெற்றி என மார்தட்டி கொண்டார்கள் ஆனால் இப்பொழுதுதான் அதற்கான வெற்றி யாருக்கென்பது தெரிகிறது என்கிறார்கள் இப்பகுதி சமூக ஆர்வலர்கள்.

உலக புகழ்பெற்ற கற்பகநாதர்குளம்,இடும்பாவம் கோவில் பகுதிகளை சுற்றி பல எண்ணை கிணறுகள் அமைக்கப்படுவதால் அதன் தொன்மையும் அதன் இயற்கை மரபும் மாறிவிடுகிறது என்கிறார்கள் இப்பகுதி மக்கள்.

இப்பகுதி மக்களை களத்திற்கே சென்று சந்தித்தது Deltavoice.in

சிகப்பு கொடிகளால் தங்களை அடையாளப்படுத்திக்கொண்டு மிக துரிதமாக அடுத்த வருட சாகுபடிக்கு கோடை உழவு செய்து தயார் நிலையில் இருந்த விளை நிலங்களை ராட்சத இயந்திரங்களை கொண்டு தன்வசப்படுத்தி கொண்டிருக்கிறது அந்த நிறுவனம்.

இடும்பாவனம் பகுதியை சுற்றி பல கிணறுகள் அமைக்கப்படும் சூழல் தென்படுவதாகவும் இதுபோன்று கிணறுகள் அமைக்கப்படுவதற்கு முன் மக்களை ஏன் அந்த நிறுவனம் கருத்து கேட்கவில்லை என ஆதங்க படுகிறார் அப்பகுதி குமார் . நெடுவாசல் கதிரமங்களம் ஏன் ? பக்கத்து ஊர் கரையங்க்காடு தொண்டியக்காடு பகுதிகளில் மக்கள் தங்கள் எதிர்ப்பை அனுதினம் தெரிவித்து வரும் நிலையில். இடும்பாவனம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியான விளாங்காட்டில் நிலங்களை விவசாயிகள் தாரை வார்த்தது ஏன் ? என கண்ணீர்மல்க கேள்வி எழுப்பினார். சிலர் வாழ பலரை கெடுப்பது சரியா ? என அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைக்கிறார்கள் அப்பகுதி மக்கள்..

 

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos