ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாயை தொடுமா ?

ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாயை தொடுமா ?

கடந்த 50 நாட்களாக விலையேற்றம். நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்ததும் போதும் செல்லாக்காசுகள் மதிப்பில் ஒவ்வொரு நாளும் பெட்ரோல் டீசல் விலை ஏறு முகம் தான். கடந்த ஜூலை மாதம் முதல் எண்ணெய் நிறுவனங்களே இந்த விலையை நிர்ணயம் செய்து வருகின்றன. இதனால் கடந்த 50 நாட்களாக இதன் விலை அதிகரித்து வருகிறது கடந்த செப்டம்பர் மாதம் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.81.75-ஆகவும், டீசல் விலை ரூ.74.41-ஆகவும் இருந்தது. இதைத்

கடந்த 50 நாட்களாக விலையேற்றம்.

நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்ததும் போதும் செல்லாக்காசுகள் மதிப்பில் ஒவ்வொரு நாளும் பெட்ரோல் டீசல் விலை ஏறு முகம் தான். கடந்த ஜூலை மாதம் முதல் எண்ணெய் நிறுவனங்களே இந்த விலையை நிர்ணயம் செய்து வருகின்றன. இதனால் கடந்த 50 நாட்களாக இதன் விலை அதிகரித்து வருகிறது

கடந்த செப்டம்பர் மாதம் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.81.75-ஆகவும், டீசல் விலை ரூ.74.41-ஆகவும் இருந்தது. இதைத் தொடந்து கடந்த மாதம் 5-ஆம் தேதி பெட்ரோல் லிட்டருக்கு ரூ.82.41 என்றும் டீசல் ரூ75.39 ஆகவும் இருந்தது.

பின்னர் செப்டம்பர் 10-ஆம் தேதி பெட்ரோல், டீசல் விலை முறையே ரூ. 83.91 மற்றும் ரூ.76.98 விற்கப்பட்டது. இப்படியே உயர்ந்து கொண்டிருந்த நிலையில் செப்டம்பர் 30-ஆம் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.86.80-க்கும், டீசல் விலை ரூ.79.08-க்கும் விற்கப்பட்டது. இந்நிலையில் இன்று இதன் விலை உயர்ந்துள்ளது. அதன்படி பெட்ரோல் விலை ரூ.87.05-க்கும் டீசல் விலை ரூ.79.40-க்கும் விற்கப்படுகிறது. கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் பெட்ரோல் விலை ரூ5.05-ம் டீசல் விலை ரூ.4.67-ம் உயர்த்தப்பட்டது

சொன்னது மோடி தான்..

பெட்ரோல் விலை அடிக்கடி உயர்வு மத்திய அரசு மீது நரேந்திர மோடி கடும் குற்றச்சாட்டு.. அடிக்கடி பெட்ரோல் டீசல் விலையை ஏற்று வது ஒரு அரசின் தோல்வியை காட்டுவதாகும். அது மக்கள் மீதான சுமையை அதிகரிக் கும் நடவடிக்கையாகும் என மோடி ஆவேசம்.

சென்னது என்னவோ மோடி தான் ஆனால் இப்போ இல்லை  இதற்கு முந்தய ஆட்சியில்.

 

அதுசரி டெல்லில பெட்ரோல் விலை உயருதாம்லன்னு கேட்ட ஆட்டோ டிரைவருக்கு நடந்த கதி நம்மளுக்கு நடக்க எவ்வளவு நேரமாகும்? கோவம் குறைந்து மறுநாள் காலையில் லட்டு கிடச்சிதே தவிர பெட்ரோல் விலை குறைந்த பாடில்லை.

அப்புறம் ஒரு வழியா நாங்க உண்மையில் பெட்ரோல் விலையை குறைச்சி தான் இருக்கோம்ன்னு ஒரு கணக்கு ஒன்ன சொன்னாங்க…! உங்களுக்கு குமாரசாமி சொன்ன கணக்கு புரிஞ்சா மட்டும் தான் இந்த கணக்கை நீங்க முழுசா புரிஞ்சிக்க முடியும்.

 

இப்படியே போனால் என்ன நடக்கும்.

பெட்ரோல் விலையேற்றத்தை பொறுத்தவரைகாந்தி ஜெயந்தியான இன்றும் உயர்ந்து 91.08 ரூபாய் என்ற புதிய உச்சத்தை எட்டிருக்கு இன்னும் சில நாட்களில் 95ரூபாயை தொடும்ன்னு பேசப்பட்டுவரும் நிலையில். ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாயை தொட்டாலும் ஆச்சர்யப்படுறதுக்கு இல்லன்னு சொல்லிட்டு வர்றாங்க.

மத்திய அரசின் விலையேற்றத்தையும் அதற்கு அவர்கள் கொடுக்கும் விளக்கத்தையும் நெட்டிசைன்கள் கலாய்த்து வருகின்றனர்.

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos