மோமோவை கண்டு பயம் வேண்டாம்…!

மோமோவை கண்டு பயம் வேண்டாம்…!

என்ன இருக்கு இந்த மோமோ சேலஞ்சில்?           உங்கள் அந்தரங்கம் சந்திக்கு வரும் என்ற மிரட்டல், அதன் மூலம் உங்களை ஆட்டி வைப்பதுதான் மூலம். ஒவ்வொருவருக்கும் அவரவர் கையிலிருக்கும் செல்போன் ஒரு அந்தரங்கத் தகவல் மையம் எனலாம். நீங்கள் ரகசியமாக எடுக்கும் போட்டோக்கள், வீடியோக்கள், உங்கள் உறவினர்களை எடுக்கும் போட்டோக்கள், வெளியிட முடியாத உங்களது அந்தரங்கங்கள் அடங்கியது உங்களது செல்போன் என்றால் அது மிகையல்ல. படம் எடுத்தோம் அழித்துவிட்டோம் என்பதெல்லாம் ஹைதர்

என்ன இருக்கு இந்த மோமோ சேலஞ்சில்?

          ங்கள் அந்தரங்கம் சந்திக்கு வரும் என்ற மிரட்டல், அதன் மூலம் உங்களை ஆட்டி வைப்பதுதான் மூலம். ஒவ்வொருவருக்கும் அவரவர் கையிலிருக்கும் செல்போன் ஒரு அந்தரங்கத் தகவல் மையம் எனலாம். நீங்கள் ரகசியமாக எடுக்கும் போட்டோக்கள், வீடியோக்கள், உங்கள் உறவினர்களை எடுக்கும் போட்டோக்கள், வெளியிட முடியாத உங்களது அந்தரங்கங்கள் அடங்கியது உங்களது செல்போன் என்றால் அது மிகையல்ல.

படம் எடுத்தோம் அழித்துவிட்டோம் என்பதெல்லாம் ஹைதர் காலத்து கதை. படம் எடுத்தால் அழிக்க முடியாது. அது உங்கள் டேட்டாவாக இருக்கும். நீங்கள் செல்போன் கேலரியில் அழிக்கலாம். ஆனால் அது கிளவுட், கூகுள் டேட்டா என்று எங்காவது சேமிக்கப்படும்.

செல்போன் வாட்ஸ் அப்பில் வரும் அழைப்பு மூலம் மோமோ சேலஞ்ச் என்று தொடர்பு கொள்வார்கள். பதிலளித்தால் உங்கள் செல்போன் கான்டாக்ட், அனைத்து டேட்டாக்கள் திருடப்படும். மறைமுகமாக உள்ளே நுழையும் மால்வேர்கள் உள்ளே உள்ள அனைத்தும் கண்காணிக்கப்படும்.

பின்னர் அவர்கள் உங்களை மிரட்டத் தொங்குவார்கள். உங்களது அந்தரங்கப் படம், குடும்பத்தாரின் அந்தரங்கப் படம் உள்ளது. அதை உங்கள் தொடர்பில் உள்ள அனைவருக்கும் அனுப்பி விடுவோம், வலைதளத்தில் போட்டுவிடுவோம் என்பார்கள். பின்னர் அவர்கள் சொற்படி கேட்க வேண்டும் என்று கட்டளை வரும்.

உங்களை மாடி மீது நிற்கச் சொல்வார்கள், ரயில் தண்டவாளம், நடு சாலையில் நிற்பது, கையை அறுத்துக்கொள்வது, உடலில் சூடு வைத்துக்கொள்வது என்று உங்களை ஆட்டிப் படைப்பார்கள். முடிவில் உங்களைத் தற்கொலைக்குத் தூண்டுவார்கள் அல்லது மன உளைச்சலில் இருந்து விடுபட நீங்களே தற்கொலை செய்துகொள்வீர்கள்.

(இப்படிப்பட்ட மோசமான மோமோ சேலஞ்ச் விளையாட்டைத் தெரியாமல் டவுன்லோடு செய்பவர்கள் நிலைதான் மேற்சொன்ன நிலை)

தமிழகத்தில் இதற்கான விழிப்புணர்வு வேண்டும் என்று காவல் துறையினர் விழிப்புடன் உள்ளனர். இதனிடையே இது குறித்து அறிந்த சில குறும்புக்கார இளைஞர்கள் இதைப் பயன்படுத்தி தங்கள் விளையாட்டை ஆரம்பித்துள்ளனர்.

Momo in tamil

இனியும் இந்த விளையாட்டு வேண்டாம் …

தனக்கு நெருக்கமான நண்பர்களுக்கு வெளிநாட்டு சிம் கார்டுகள் மூலம் அழைக்கும் இவர்கள் நாங்கள் மோமோ சேலஞ்ச் பேசுகிறோம் என்று அழைத்து அவரது குடும்பத்தார், படிப்பு, வேலை பற்றிய தகவல்களைக் கூறி உங்கள் செல்போனை ஹேக் செய்துவிட்டோம் என்று கூறி மிரட்டுகின்றனர். ஏதாவது போட்டோக்களை அனுப்பி வைத்து அவர்களை பயப்பட வைத்து அதில் இன்பம் காணுகின்றனர்.

மால்வேர் செட்டிங் மறைமுகமாக செல்போனில் இருக்கும் என்கிறார்களே?

அப்படி இருக்க வாய்ப்பில்லை. இதுபோன்று வரும் படங்களை டவுன்லோடு செய்யும்போதுதான் மால்வேர் ஊடுருவும். நீங்கள் அதைத் தவிர்க்க ஆட்டோ டவுன்லோடு ஆப்ஷனை கட் செய்துவிட வேண்டும். தேவைப்பட்டால் டவுன்லோடு செய்யும் முறை மட்டுமே செல்போனில் வைத்துக்கொள்ள வேண்டும்.

தேவையற்ற லிங்குகளை டவுன்லோடு செய்யக்கூடாது. அப்படி இருந்தால் மட்டுமே தப்பிக்க முடியும்.

மோமோ அழைப்பு வந்த பின்னர் என்ன தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ளலாம்?

முதலில் மோமோ அழைப்பு வந்த நம்பரை பிளாக் பண்ணுங்கள். உங்கள் செல்போன் டேட்டாவை அணைத்து விடுங்கள். டேட்டா இருந்தால்தான் எதுவும் வெளியே போகாது, உள்ளே வராது. உங்கள் கேமராவை ஆஃப் செய்து விடுங்கள்.

கேமராவை ஆபரேட் செய்யலாம் என்பதால், தேவைப்பட்டால் அதன் மீது ஸ்டிக்கர் ஒட்டி விடுங்கள். இதனால் அவர்கள் உங்கள் கேமராவை ஆன் செய்து கண்காணிக்க முடியாது.

மோமோவிலிருந்து பாதுகாப்பாய் இருப்பது எப்படி ?

குழந்தைகளுக்கு மோமோ பற்றி சொல்லுங்கள். தனிப்பட்ட தகவல்கள், படங்கள், வீடியோக்கள் போன்றவற்றை யாருக்கும் அனுப்பக் கூடாது என்பதை புரிய வையுங்கள். புதிய எண்ணிலிருந்து என்ன மெசேஜ் வந்தாலும் பதிலளிக்காதீர்கள். உடனடியாக பிளாக் செய்யுங்கள். என்ன தான் நடக்கிறது பார்ப்போமே எனும் அசட்டுத் துணிச்சல் உயிரைப் பலிவாங்கலாம்.எந்த படம் வந்தாலும் அனுப்பினவரைப் பற்றித் தெரியாவிட்டால் திறக்கவோ, தரவிறக்கம் செய்யவோ வேண்டாம். அட்மின் யார் என்று தெரியாத குழுக்களில் தங்காதீர்கள், வெளியேறிவிடுங்கள். வாட்ஸப்பில் ஆட்டோ டவுன்லோட் ஆப்ஷனை ஆஃப் செய்தே வையுங்கள். பாதுகாப்பு பகுதிக்குச் சென்று, நமது காண்டாக்ட் லிஸ்டில் இல்லாத நபர்களுக்கு நமது புரஃபைல் தெரியாதபடி மாற்றி வைத்துக் கொள்ளுங்கள். குழந்தைகளோடு அதிக நேரம் செலவிடுங்கள். குழந்தைகள் எல்லாவற்றையும் உங்களிடம் சொல்ல உற்சாகப்படுத்துங்கள். குழந்தை சோர்வாகவோ, கலக்கமாகவோ, பதட்டமாகவோ, சரியாகச் சாப்பிடாமலோ, இரவில் தூங்காமலோ இருந்தால் உடனே உஷாராகி விடுங்கள். அவர்களிடம் உடனடியாகப் பேசுங்கள். குழந்தைகளுக்கு ஸ்மார்ட்போன் கொடுப்பதை குறையுங்கள். அவர்களுடைய செயல்பாட்டைக் கவனியுங்கள். உங்களுக்குத் தெரியாதபடி அவர்கள் இரவில் பேசுவதை தடை செய்யுங்கள். எந்தத் தவறை குழந்தை செய்திருந்தாலும் நீங்கள் மன்னிப்பீர்கள் எனும் உண்மையை அவர்களுக்குப் புரியவையுங்கள்.

தெரிந்த பிள்ளைகள் இந்த விபரீதத்தில் இருந்தால் உடனே வெளியே கொண்டு வர முயலுங்கள். முடியாவிடில் காவல்துறைக்கு தெரியப்படுத்துங்கள்.

காவல்துறையினர் எச்சரிக்கை..

மோமோ சேலஞ்சை தடுக்க என்ன செய்யலாம்? போலியாக மிரட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை ஆணையர் அர்ஜுன் சரவணன் தெரிவித்துள்ளார். மோமோ சேலஞ்ச் என்ற விபரீதத்தால் இளைய தலைமுறையினர் பாதிக்கப்படுவது ஒருபுறமிருக்க, மோமோ சேலஞ்ச் பெயரால் தெரிந்த நபர்களை ஜாலியாக மிரட்டுவதன் மூலம் அவர்கள் மன உளைச்சல் அடைந்து போலீஸாருக்குப் புகாராக வருகிறது . உண்மையில் மோமோ சேலஞ்ச் அழைப்பு வந்தால், முதலில் பயப்படக்கூடாது. யார் இதற்குத் தீர்வு தருவார்களோ அவர்களைத்தான் நீங்கள் அணுக வேண்டும். ஒவ்வொரு நகரத்திலும் சைபர் பிரிவு யூனிட் காவல்துறையில் உள்ளது. மாவட்டங்களிலும் சைபர் செல் இருக்கும். அவர்களிடம் முதலில் கூறுங்கள். பயந்துகொண்டு வேறு எதுவும் செய்யும் அவசியம் கிடையாது. விழிப்புணர்வுதான் முக்கியம்.

2 comments

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

2 Comments

 • சத்யா
  19/08/2018, 5:06 PM

  இந்த நேரத்தில் மிகவும் அவசியமான பதிவு நன்றி

  REPLY
  • deltavoice@சத்யா
   20/08/2018, 5:16 PM

   நன்றி தொடர்ந்து இணைந்திருங்கள்

   REPLY

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos