என்ன செய்துவிடும் இந்த “ரெட் அலர்ட்”..?

என்ன செய்துவிடும் இந்த “ரெட் அலர்ட்”..?

ரெட் அலர்ட் ரெட் அலர்ட் என்றால் என்ன ? வானிலை ஆய்வு மையம் மக்களுக்கு அறிவிக்கும் எச்சரிக்கைகள் தான் இந்த அலர்ட். நான்கு வித்தியசமான அலர்ட்கள் நான்கு விதமான காலநிலைகளை மக்களுக்கு தெரியப்படுத்துவதற்காக பயன்படுத்தப்படுகிறது. அவைகள் பொதுவாக பச்சை எச்சரிக்கை (Green Alert), மஞ்சள் எச்சரிக்கை (Yellow Alert), அம்பர் அல்லது ஆரஞ்ச் எச்சரிக்கை (Amber Alert), மற்றும் சிவப்பு எச்சரிக்கை (Red Alert) ஆகும். தமிழகத்திற்கு வரும் 7ம் தேதி ரெட் அலர்ட் என வானிலை

ரெட் அலர்ட்

tamilnadu red alert

ரெட் அலர்ட் என்றால் என்ன ?

வானிலை ஆய்வு மையம் மக்களுக்கு அறிவிக்கும் எச்சரிக்கைகள் தான் இந்த அலர்ட். நான்கு வித்தியசமான அலர்ட்கள் நான்கு விதமான காலநிலைகளை மக்களுக்கு தெரியப்படுத்துவதற்காக பயன்படுத்தப்படுகிறது. அவைகள் பொதுவாக பச்சை எச்சரிக்கை (Green Alert), மஞ்சள் எச்சரிக்கை (Yellow Alert), அம்பர் அல்லது ஆரஞ்ச் எச்சரிக்கை (Amber Alert), மற்றும் சிவப்பு எச்சரிக்கை (Red Alert) ஆகும்.

தமிழகத்திற்கு வரும் 7ம் தேதி ரெட் அலர்ட் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் வரும் 7ம் தேதி அனேக இடங்களில் மிக அதிகமான மழை பெய்யும் எனவும், மாவட்ட ஆட்சியர்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் வானிலை மையம் எச்சரிக்கை தெரிவித்துள்ளது.

அடுத்த 5 நாட்களில் வானிலை தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுவது போல் அறியும்பட்சத்தில் வானிலை ஆய்வு மையம் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும். அந்த எச்சரிக்கையானது பச்சை எச்சரிக்கை (Green Alert ), மஞ்சள் எச்சரிக்கை (Yellow Alert) , ஆம்பர் எச்சரிக்கை ( Amber Alert)  மற்றும் சிவப்பு எச்சரிக்கை (Red Alert) என மொத்தம் நான்கு வகைகளாக பிரிக்கப்படுகிறது.

பச்சை எச்சரிக்கை கொடுக்கப்பட்டால், மக்கள் அச்சப்படத்தேவையில்லை. ஏனெனில், மழை பொழிவதற்கான அறிகுறி தென்பட்டால் மட்டுமே பச்சை எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

மிக மோசமான வானிலை இருக்கும் பட்சத்தில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. மஞ்சள் எச்சரிக்கை கொடுத்தால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

உயிர்சேதம் மற்றும் பொருட்சேதம் ஏற்படும் வகையில் வானிலை இருக்கும் பட்சத்தில் ஆம்பர் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. அப்பொழுது, பயணம் செய்வதை மக்கள் தவிர்க்கவேண்டும்.

மிக மிக மோசமான வானிலை இருக்கும் பட்சத்தில் ரெட் அலர்ட் அறிவிக்கப்படும். அதாவது, மக்கள் தங்கள் உயிர், உடைமைகளை பார்த்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். மின்சார சேவை நிறுத்தம், சாலை போக்குவரத்து துண்டிப்பு முதலிய மக்களின் இயல்பு வாழக்கையினை பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் வானிலை இருக்கும் என்பதற்கான எச்சரிக்கையாகவே ரெட் அலர்ட் பார்க்கப்படுகிறது.

நன்றி Jaal times 

 

தமிழகத்திற்கு ரெட் அலர்ட்.. உயர் அதிகாரிகளுடன் கிரிஜா வைத்தியநாதன் அவசர ஆலோசனை.

tamilnadu red alert

 

தமிழகத்துக்கு அதிக மழை காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ரெட் அலர்ட் மற்றும் அது சார்ந்த பல முன்னெச்சரிக்கை, அறிவுரைகளை தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி மக்களுக்கு தேவையான நிவாரண முகாம்கள் தயாராக இருக்க வேண்டும், மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெற செய்ய வேண்டும், மின் இணைப்புகளை முன்கூட்டியே துண்டிக்க வேண்டும் என்பது போன்றவை அதில் உள்ளன. இது குறித்தெல்லாம் கிரிஜா வைத்தியநாதன் இன்று ஆலோசனைகளை மேற்கொண்டு உரிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

தமிழகத்திற்கு ரெட் அலர்ட்.. பாதுகாப்பாக இருப்பது எப்படி?

ஒரே நாளில் 25 செ.மீ மழைக்கு வாய்ப்பு அந்த தினம், அதிதீவிர மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

குறைந்த நேரத்தில் அதிக அளவு மழை பெய்து விட வாய்ப்பு உள்ளது என்பதால்தான் இந்த ரெட் அலர்ட் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. எனவே அதுபோன்ற சூழ்நிலையின் போது, மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட கூடும், மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர வேண்டி வரும்.

குறிப்பாக உணவுப்பொருட்கள் மற்றும் முதலுதவி பெட்டி போன்ற பாதுகாப்பு உபகரணங்களை கைவசம் வைத்துக்கொள்ள வேண்டும்.

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos