கரையை கடந்தது கஜா புயல்..

கரையை கடந்தது கஜா புயல்..

அதிகாலை 1 மணியளவில் வேதாரணியத்தில் கரையை கடக்க தொடங்கிய புயல் டெல்டாவை விட்டு முழுமையாக 8 மணியளவில் வெளியேறும் என எதிபார்க்கப்படுகிறது. கஜா புயலின் வேகம், 14 கி.மீ-யிலிருந்து 26 கி.மீ-யாக உள்ளது.பொதுமக்கள் அலட்சியமாக இருந்திட வேண்டாம் என வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். கஜா புயல் மணிக்கு 90 முதல் 120 கி.மீ வேகத்தில் சூறாவளிக் காற்றாக வீசக்கூடும் என்று சொல்லப்படுவதால், பாதுகாப்பு, மீட்பு மற்றும் நிவாரண பணிகளை நாகப்பட்டினம், காரைக்கால் மாவட்ட நிர்வாகங்கள் முழு வீச்சில் செய்து

அதிகாலை 1 மணியளவில் வேதாரணியத்தில் கரையை கடக்க தொடங்கிய புயல் டெல்டாவை விட்டு முழுமையாக 8 மணியளவில் வெளியேறும் என எதிபார்க்கப்படுகிறது.

கஜா புயலின் வேகம், 14 கி.மீ-யிலிருந்து 26 கி.மீ-யாக உள்ளது.பொதுமக்கள் அலட்சியமாக இருந்திட வேண்டாம் என வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

கஜா புயல் மணிக்கு 90 முதல் 120 கி.மீ வேகத்தில் சூறாவளிக் காற்றாக வீசக்கூடும் என்று சொல்லப்படுவதால், பாதுகாப்பு, மீட்பு மற்றும் நிவாரண பணிகளை நாகப்பட்டினம், காரைக்கால் மாவட்ட நிர்வாகங்கள் முழு வீச்சில் செய்து வருகின்றன.

பொது மக்களிடம் புயல் பற்றிய விழிப்பு உணர்வை ஏற்படுத்த வானொலி, ஒலிபெருக்கி, சமூக வலைதளங்களை மாவட்ட நிர்வாகங்கள் முழுமையாகப் பயன்படுத்தி வருகிறது.

தற்போதைய இந்திய அரசின் அதிகாரப்பூர்வ satellite தகவலை காண இங்கே கிளிக் செய்யவும். 

கடலோரத்தை ஒட்டியுள்ள 10 கி.மீ பரப்பிலுள்ள கிராமங்களையும் பேரிடர் சார்பு பகுதிகளாகவே அதிகாரிகள் கருதுகின்றனர். நிவாரணம், மீட்புக்குழுவினர்களுக்கும் இந்த வேகத்தின் அடிப்படையிலேயே உத்தரவுகள் பறக்கின்றன.

நாகை மாவட்டத்தில் 83 இடங்கள் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளாகக் கண்டறியப்பட்டுள்ளன. இந்த இடங்களுக்கு தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் 25 பேரும் மாநிலப் பேரிடர் குழுவினர் 120 பேரும் விரைந்துள்ளனர்.

காலை 6.30 மணி நிலவரம்

டெல்டாவின் கடலோர கிராமங்களில் பாதுகாப்பு பணிகள் மிக தீவிரமாக உள்ளது. டெல்டாவின் பெரும்பாலான இடங்களில் செல்போன் கோபுரங்கள் செயழிழந்து போனதால் தொடர்பு துண்டிக்கப்பட்டு உள்ளது.

பெரும்பாலனால இடங்களில் சுரை காற்றுடன் மழை கொட்டி தீற்கிறது. மரங்கள் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது. மக்கள் வீட்டிற்குள்ளேயே  முடங்கும் நிலை உள்ளது.

தற்போதைய புயல் மற்றும் காற்றின் வேகம் மழையின் அளவு குறித்த தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

 

கஜா புயல் தொடர்பான தகவல்கள் மற்றும் காணொளிகளை டெல்டா வாய்ஸ் இணையதளத்திற்கு அனுப்ப 8940050325 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் செய்யவும்.


தொடர்சியான update களுக்கு இதே லிங்க் ல் சிறிது நேரத்திற்கு பிறகு வரவும்…..

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos