கஜா புயல் பற்றி நம் ஊர் வானிலை செல்வகுமார்…

கஜா புயல் பற்றி நம் ஊர் வானிலை செல்வகுமார்…

கஜா புயல் பற்றி வானிலை செல்வகுமார்   வங்க கடலிலில் நிலை கொண்டிருக்கும் கஜா புயலானது  தற்பொழுது கரையை கடக்கும் இடமாகிய வேதாரநியதிற்கு கிழக்கு வடகிழக்கு எர்திசையில் 800 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது .தென் மேற்கு திசை நோக்கி நகரத்தொடங்கியுள்ளது. இனிமேல் மணிக்கு 100 km வரை வேகமும் 20 km வேகம் வரை நகரத்தொட்டங்கும் . படிப்படியாக தீவிர புயலாக வேதாரணியத்தை இலக்காக கொண்டு நகர்ந்து வருகிறது.இந்த புயல் தீவிர புயலாக கரையை கடக்கும்,

கஜா புயல் பற்றி வானிலை செல்வகுமார்

 

வங்க கடலிலில் நிலை கொண்டிருக்கும் கஜா புயலானது  தற்பொழுது கரையை கடக்கும் இடமாகிய வேதாரநியதிற்கு கிழக்கு வடகிழக்கு எர்திசையில் 800 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது .தென் மேற்கு திசை நோக்கி நகரத்தொடங்கியுள்ளது. இனிமேல் மணிக்கு 100 km வரை வேகமும் 20 km வேகம் வரை நகரத்தொட்டங்கும் . படிப்படியாக தீவிர புயலாக வேதாரணியத்தை இலக்காக கொண்டு நகர்ந்து வருகிறது.இந்த புயல் தீவிர புயலாக கரையை கடக்கும், வேதாரணியத்தில் இருந்து திருவாரூர் மாவட்டம் தெற்கு, தஞ்சை தெற்கு வழியாக புதுக்கோட்டையை கடந்து இறுதியாக கேரளாவை சென்றடையும். திருவாருரின் கடற்கரை பகுதி கிராமங்களில் காற்றின் வேகம் மிக தீவிரமாக இருக்கும்  எனகிறார்.

 

2018 நவம்பர; 13 மாலை 4

2018 வடகிழக்கு பருவமழை நிகழ்வுகள்.(வ.கி.ப.ம.நி).வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள கஜாபுயல் நாகப்பட்டிணத்திற்கு கிழக்கு, வடகிழக்குதிசையில் 750 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது.மியான்மார்  கரையோரம் நிலை கொண்டிருந்த எதிர்புயல் செயலிழந்து கொண்டிருக்கும் காரணத்தால் கஜா புயல் மேற்கு நோக்கி நகர்ந்து, தற்போது தென் மேற்கு நோக்கி நகரத்தொடங்கியது. இது மேலும் தீவிரமடைந்து தீவிரப்புயலாகி நவம்பர் 15 மதியம் அல்லது மாலை நாகப்பட்டிணம்மாவட்டம் வேதாரண்யம் அருகே சற்று செயல்குறைந்த புயலாக மணிக்கு 100 முதல் 125 கி.மீ வேகத்தில் கரையை கடக்கும்.

 

 

கஜா புயல் கரைகடந்து திருவாரூர் மாவட்டம் தெற்கு, தஞ்சாவு+ர; மாவட்டம் தெற்கு வழியாக நகர்ந்து தாழ்வுமண்டலமாக செயலிழந்து புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை,தேனி,மாவட்டங்கள் வழியாக கேரளாவின் ஆலப்புழா அருகே அரபிக்கடலில் இறங்கும். இந்த நிகழ்வால், நாகப்பட்டிணம் மாவட்டம்தலைஞாயிறு, வேதாரண்யம் பகுதிகளில் நவம்பர்  15 காலை முதல் மணிக்கு 100 கி.மீ வேக சூறைக்காற்றுடன் மழை பெய்யத் தொடங்கும்

புயல் கரையை கடக்கும் போது அதிகன மழை(20செ.மீ முதல் 25செ.மீ) பெய்ய வாய்ப்புள்ளது.நாகப்பட்டிணம், வேளாங்கண்ணி, திருப்பூண்டி திருத்துறைப்பூண்டி, கோட்டூர;, முத்துப்பேட்டை,பகுதிகளில் மணிக்கு 80 கி.மீ வேக காற்றுடன் 20 செ.மீ வரை பெய்யும்.திருவாரூர் காரைக்கால், நாகூர;, மன்னார் குடி,நீடாமங்கலம்,வடுவூர் மதுக்கூர் ,அதிராம்பட்டிணம், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டைபகுதிகளில் மணிக்கு 75 கி.மீ வேக காற்றுடன் 20 செ.மீ மழை பெய்யும்.

 

வானிலை செல்வகுமார் Jaal Times க்கு அளித்த பிரத்யேக பேட்டி.


நாகப்பட்டிணம் மாவட்டம் வடக்கு பகுதி, தஞ்சாவுர் மாவட்ட வடக்கு பகுதி, திருவாரூர் மாவட்ட வடக்கு பகுதிகள், கடலூர்  அரியலூர். மாவட்டங்களில் மணிக்கு 60 கி.மீ வேக காற்றுடன் 15 செ.மீ முதல் 20 செ.மீ மழை பெய்யும். சென்னை, திருவள்ளூர் காஞ்சிபுரம்,விழுப்புரம்,புதுச்சேரி பகுதிகளில் அச்சப்படும்படியான காற்று இல்லை. கனமழை 10 செ.மீ முதல் 15 செ.மீ வரை பெய்யும்.

திருவண்ணாமலை, வேலூர; பகுதிகளில் 5 செமி பெய்யும். மழை   மாவட்டத்டதில் லேசான மழையும், தர;மபுரி, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் மிதமான மழையும், ஈரோடு, கரூர;, திருச்சி மாவட்டங்களில் சற்று கனமழையும் பெய்யும். நீலகிரி, திருப்புர் கோயம்புத்தூர் மாவட்டங்களில் மிதமானது முதல் சற்று கனமழை பெய்யும். திருப்புர் தெற்கு, கோயம்புத்தூர; தெற்கு, திண்டுக்கல்,சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை,தேனி மாவட்டங்களில் கன மழை பெய்யும்.

இராமநாதபுரம்,தூத்துக்குடி,கன்னியாக்குமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் கன மழை உறுதி. மிக கனமழைக்கு வாய்ப்பு.புயல் அரபிக்கடல் சென்று தீவிரமாகி சோமாலியா செல்லும் என்பதால், கிழக்குக் காற்றை ஈரமாக்கும் இதன் காரணமாக டெல்டா, தென் தமிழகம்,உள் தமிழகத்தில் விட்டு விட்டு மிதமான மழை இருந்து கொண்டிருக்கும். மேற்கு தொடர்ச்சிமலையின் கிழக்கு பகுதிகளில் சற்று கன மழை இருக்கும். புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை நவம்பர; 16-ல் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை சுமத்திரா அருகே உருவாகி அந்தமான் கடலை அடைந்து தீவிரடைந்து நவம்பரில் 21ல் இலங்கையை அடையும். இது தமிழக கரையை ஒட்டி வந்து நவம்பர்  22 முதல் நவம்பர; 26 வரை தமிழகமெங்கும் நல்ல மழை கொடுக்கும். வடகடலோர மாவட்டங்கள் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களுக்கு கனமழை கொடுக்கும்.

 

அதற்கடுத்த காற்றழுத்தத் தாழ்வு நிலை தற்போது பசுபிக் பெருங்கடலில் நீடித்துக் கொண்டிருக்கும் தாழ்வுநிலை திவிரமடைந்து,வியட்நாம், கம்போடியா கரை கடந்து, தென் சீனக்கடல், தாய்லாந்து வளைகுடா, தாய்லாந்து வழியே நவம்பர்  22-ல் அந்தமான் கடல் பகுதியை அடையும். அங்கு அது புயலாக தீவிரமடைந்து,மிக தீவிர, அதிதீவிர,சூப்பர்  புயலாகி நவம்பர்  29, 30 டிசம்பர்  1-ல் வட தமிழகத்தில் கரை கடக்கும் எனகிறார்.

 

இன்று 14.11.2018 நிலவரப்படி வானிலை செல்வகுமார் அளித்த பிரத்யேக ஆடியோ பதிவு.

 

1 comment
Delta Voice
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

1 Comment

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos